நான் மாஸ்க் அணியனும்னா ஊழல் ஒழியனும்: மெக்சிகோ அதிபர் அதிரடி

42 Views
Editor: 0

மெக்சிகோசிட்டி: ஊழல் ஒழிந்தால்தான் நான் மாஸ்க் அணிவேன் என மெக்சிகோ அதிபர் லோபஸ் ஓபரேடர் அதிரடியாக தெரிவித்துள்ளார்..

நான் மாஸ்க் அணியனும்னா ஊழல் ஒழியனும்: மெக்சிகோ அதிபர் அதிரடி

மெக்சிகோசிட்டி: ஊழல் ஒழிந்தால்தான் நான் மாஸ்க் அணிவேன் என மெக்சிகோ அதிபர் லோபஸ் ஓபரேடர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

நோய்த் தொற்று மேலும் பரவாமல் இருக்க சமூக விலகல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் கடைபிடித்து வருகின்றன.
இந்நிலையில் மெக்சிகோ அதிபர் லோபஸ் ஓபரேடர், நாட்டில் ஊழல் ஒழிந்தால் மட்டுமே தான் முகக்கவசம் அணிவதாக அதிரடியாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “நாம் ஒரு ஒப்பந்தம் போடுவோம். இந்த நாட்டில் ஊழல் விரைவாக ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நான் மாஸ்க் அணிவேன். பொருளாதாரம் மேம்பட மாஸ்க் ஒரு காரணமாக இருந்தால் அதை உடனே அணியவும் தயாராக இருக்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.
latest tamil newsகொரோனா நோய்த் தொற்று காரணமாக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் அதிபர் டிரம்ப், முகக்கவசம் அணிவதை தவிர்த்து வந்தார். ஆனால் தொடர்ந்து வந்த விமர்சனம் காரணமாக டிரம்ப் முகக்கவசம் அணியத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகச்செய்திகள்