10 ஆண்டுகள் கடந்தாலும் 'கொரோனா' தாக்கம் நீட்டிக்கும்: டபிள்யு. எச்.ஓ.,

46 Views
Editor: 0

ஜெனீவா : ''கொரோனா வைரஸ் உலக நாடுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், 10 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கும்,'' என, உலக சுகாதார அமைப்பின் தலைவர், டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் தெரிவித்துள்ளார்..

10 ஆண்டுகள் கடந்தாலும் 'கொரோனா' தாக்கம் நீட்டிக்கும்: டபிள்யு. எச்.ஓ.,

ஜெனீவா : ''கொரோனா வைரஸ் உலக நாடுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், 10 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கும்,'' என, உலக சுகாதார அமைப்பின் தலைவர், டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:உலக நாடுகள் நுாறாண்டுக்கு ஒரு முறை, வரலாறு கானாத சுகாதாரப் பிரச்னையை சந்திக்கின்றன. கடந்த, 1918ல், 'ஸ்பானிஷ் புளு' பல கோடி மக்களை மாய்த்தது. தற்போது, கொரோனா வைரஸ், 1.80 கோடிக்கும் அதிகமானோரை பாதித்துள்ளது. உயிரிழப்பு, 6.80 லட்சத்தை தாண்டியுள்ளது.
latest tamil news

அத்துடன் உலக நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கம், 10 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கும்.உலக சுகாதார அமைப்பு, கடந்த, ஜன.,30ல், கொரோனா நோய் தொற்று குறித்து, உலக நாடுகளுக்கு பொது சுகாதார அவசர எச்சரிக்கை விடுத்தது. அப்போது, சீனாவில் மட்டும் தான் கொரோனா பரவியிருந்தது. அதன் பின், அதன் பரவல் வேகமும், பாதிப்பும் எண்ணிப் பார்க்க முடியாதபடி உள்ளது.

 

உலகச்செய்திகள்