புதுடெல்லி:
வங்கக்கடலில் உருவான தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது:
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
வடக்கு ஒடிசா-மேற்குவங்கம் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளதால், தமிழகம், கர்நாடகா, கேரளா, ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.