உலகைச் சுற்றி...

45 Views
Editor: 0

* இரண்டாம் உலகப்போரின்போது, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந் தேதி அமெரிக்கா முதல் அணுகுண்டை போட்டு 1.40 லட்சம் பேரை கொன்று குவித்தது. இதன் 75-வது ஆண்டு நினைவுதினம் அங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது..

ஜப்பான் ,

 

உலகைச் சுற்றி...

 

* இரண்டாம் உலகப்போரின்போது, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந் தேதி அமெரிக்கா முதல் அணுகுண்டை போட்டு 1.40 லட்சம் பேரை கொன்று குவித்தது. இதன் 75-வது ஆண்டு நினைவுதினம் அங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அங்குள்ள சமாதான பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் ஷின்ஜோ அபே கலந்து கொண்டார். அப்போது அங்கே மரபுப்படி மணிகள் ஒலித்தன. எப்போதும் இந்த நிகழ்வின்போது அங்கு மக்கள் வெள்ளம் அலைமோதும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றால் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட்டது.

* பாகிஸ்தானில் கராச்சி நகரில் ஜமாத் இ இஸ்லாமி என்ற அமைப்பினர் நடத்திய பேரணியில் கையெறி குண்டு வீசப்பட்டது. இதில் 39 பேர் படுகாயம் அடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

* அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று, இன அநீதி, டிரம்ப் நிர்வாகத்தின் பாசாங்குத்தனம் ஆகியவற்றால் நான் லேசான மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செல்லி ஒபாமா தெரிவித்துள்ளார்.

* ஆப்கானிஸ்தானில் பக்ரீத் பண்டிகையையொட்டி 3 நாட்கள் சண்டை நிறுத்தம் அமலில் இருந்தபோது நடந்த 7 சம்பவங்களில் 32 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஆப்கானிஸ்தான் சுதந்திர மனித உரிமைகள் ஆணையம் ஒரு அறிக்கையில் கூறி உள்ளது.

* தென் கொரியாவின் தலைநகர் சியோலில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அங்குள்ள அணை அருகே நடந்த படகு விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது.

* ஈரானில் சஜத் ஷாசனயி என்ற ராணுவ வீரரை சுட்டுக்கொன்ற முஸ்தபா சலேஹி என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அவரது தண்டனை நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.

* சிங்கப்பூரில் கணவர் விவாகரத்து கேட்ட ஆத்திரத்தில் மலிசா என்ற பெண், எரிந்த சிகரெட்துண்டை மெத்தையில் தூக்கி எறிந்ததால் தீப்பிடித்தது. இது தொடர்பான வழக்கில் அந்த பெண்ணுக்கு 5 மாத சிறைத்தண்டனை விதித்து அங்குள்ள கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

 

 

உலகச்செய்திகள்