2021 ஜுலை வரை வீட்டிலிருந்தே பணியாற்றலாம்... சிறப்பு போனஸ்...! ஃபேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு:
ஃபேஸ்புக் நிறுவனம் தனது ஊழியர்களை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதித்துள்ளது.
அரசு மற்றும் சுகாதார வல்லுநர்களிடம் கலந்து ஆலோசித்த பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களின் தேவைக்காக 75,000 ரூபாய் வரை போனஸ் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அரசு வழிகாட்டுதலுக்கு ஏற்ப குறைந்த ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்கும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2021 ஜூன் மாதம் வரை ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என கடந்த மாதம் கூகுள் நிறுவனம் அறிவித்ததை அடுத்து தற்போது ஃபேஸ்புக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.