நிலம் கடவுள் தந்த வரம்

51 Views
Editor: 0

விவசாயிகள் மண்வளம் பேணுதல் குறித்து சிந்திப்பது நல்லது. பூமியில் அரை அடி மண் உற்பத்தியாக ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது. நிலம் நமக்கு கடவுள் தந்த வரம்..

நிலம் கடவுள் தந்த வரம்:

விவசாயிகள் மண்வளம் பேணுதல் குறித்து சிந்திப்பது நல்லது. பூமியில் அரை அடி மண் உற்பத்தியாக ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது. நிலம் நமக்கு கடவுள் தந்த வரம். இதை காப்பதும், அழிப்பதும் நிர்வாக முறைகள் மூலம் தான்.
மண்ணையும், தண்ணீரையும் முழு பரிசோதனை செய்வது அவசியம். மண்ணிலுள்ள உப்பின் நிலையை அறிய 'இ.சி.' என்ற அலகு உதவும். கார, அமில நிலையை அறிய 'பி.எச்' என்ற அலகும், சோடிய அயனிகள் அளவை அறிய இ.எஸ்.பி' என்ற அலகும் உதவுகிறது.
பாசன நீரில் உள்ள அளவுக்கும் இதே அலகு தான். உவர், களர் மற்றும் இரண்டும் சேர்ந்தது பிரச்னை மண் ஆகும்.
மண்ணிலோ, தண்ணீரிலோ கரையக் கூடிய உப்புகள் சம நிலை 7 எனும் பி.எச்.ஐ., தாண்டி இருக்கும். அதாவது 7க்கு மேல் 8.5 க்கு கீழே இருந்து அதில் இ.சி., 4க்கு மேலிருந்து இ.எஸ்.பி., எனும் மாற்றக்கூடிய சோடியம் அயனிகள் 15 சதவீதத்துக்கு கீழே இருந்தால் அது உவர் தன்மை உடைய மண் அல்லது நீர் என வகைப்படுத்தப்படுகிறது.
களர், உவர் பிரச்னை உள்ள மண்ணை சீர்திருத்திட பல வழிகள் உள்ளன. வடிகாலை சீராக வைத்து கொண்டு ஆண்டு தோறும் தக்கைப்பூண்டு, கொளுஞ்சி, சணப்பு போன்ற பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிட்டு மடக்கி உழுது நீரைதேக்கி வழிய வைத்தால் மிதமான களர் நிலத்தை நல்ல நிலமாக மாற்றலாம்.
களர் நிலத்திற்கு ஜிப்சம் இட்டு சீராக நீர் பாய்ச்சி நீரை 4 முதல் 6 அங்குலம் உயரம் தேக்கி தானாக கசிந்து வடிகாலில் வடிய செய்ய வேண்டும். நீர் குறைய குறைய அல்லது 3 நாட்கள் தொடர்ந்து நீரைத் தேக்கவும். இவ்வாறு 3 அல்லது 4 முறை செய்ய வேண்டும்.

-- டாக்டர். பா.இளங்கோவன்
வேளாண் துணை இயக்குனர், தேனி
98420 07125

உலகச்செய்திகள்