ரஷ்யாவின் கோவிட்-19 தடுப்பூசி முட்டாள்தனமான செயல்!’ - எதிர்க்கும் உலக விஞ்ஞானிகள்...

49 Views
Editor: 0

`உலகம் முழுவதுமுள்ள விஞ்ஞானிகள் இந்தத் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராகத் திறம்படச் செயல்படும் என்பதை ஏற்க முடியாது’ என்று தெரிவித்துள்னர்..

ரஷ்யாவின் கோவிட்-19 தடுப்பூசி முட்டாள்தனமான செயல்!’ - எதிர்க்கும் உலக விஞ்ஞானிகள்

 

`உலகம் முழுவதுமுள்ள விஞ்ஞானிகள் இந்தத் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராகத் திறம்படச் செயல்படும் என்பதை ஏற்க முடியாது’ என்று தெரிவித்துள்னர்.

கொரோனா வைரஸ் தடுப்புக்காக உலகின் முதல் தடுப்பூசியை வெளியிட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். தன் இரண்டு மகள்களில் ஒருவருக்குத் தடுப்பூசியைச் செலுத்தி, பரிசோதனை நடத்தியதாகவும், புதிய தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்றும் தெரிவித்தார். தடுப்பூசியைக் கண்டறிவதற்கு இந்தியா உட்பட பல நாடுகள் முயன்று வரும் நிலையில், ரஷ்யாவிலிருந்து வந்த நற்செய்தி உலகம் முழுவதுமுள்ள மக்களை ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

Covid-19

Covid-19

Martin Sanchez on Unsplash

ரஷ்ய தொலைக்காட்சியில் பேசிய புதின்,``ஸ்புட்னிக் வி' (Sputnik V) என்று பெயரிடப்பட்டுள்ள தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய முடியும். இந்தத் தடுப்பூசியானது கோவிட்-19 வைரஸுக்கு எதிரான வலுவான நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கும். மேலும், தேவையான அனைத்துப் பரிசோதனைகளையும் கடந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

உலகச்செய்திகள்