தனியார் மயமாக்கப்பட்ட ரயில்வே திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கை என்ன தெரியுமா?
Private Companies Railway Plan : நாடு முழுவதும் தனியார் பயணிகள் ரயில்களை இயக்குவதற்கு 23 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்ததாக ரயில்வே துறை கூறியுள்ளது. இதுகுறித்து ரயில்வே அறிக்கை வெளியிட்டது: நாடு முழுவதும் 12 நகரங்களில் இருந்து 109 வழித்தடங்களில் தனியார் மூலம் 151 அதிநவீன ரயில்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக இதில் பங்கேற்க ஆர்வம் உள்ள தனியார் நிறுவனங்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இந்த கூட்டத்தில் பாம்பாட்டியார், அல்ஸ்டோம், சீமன்ண்ஸ், ஜிஎம்ஆர், பிஇஎம்எல், ஐஆர்சிடிசி, டெல், CAF, மேத்தா குரூப், ஸ்டெர்லைட், பாரத் போர்ச், ஜே கேபி, டிக்டாக்கர் வேகன் லிமிடெட், உள்ளிட்ட 23 தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் 30,000 கோடி தனியார் முதலீட்டுடன் ரயில்கள் இயக்கப்பட்டன. தனியார் முதலீட்டுடன் ரயில்வே சேவை தொடர்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட நடவடிக்கை இதுவேயாகும்.
அடுத்ததாக இரண்டாம் கட்டங்களாக நடைபெறும் ஏலம் விடும் நடவடிக்கைக்கு பிறகு, தகுதியான தனியார் நிறுவனங்களுக்கு ரயில்களை இயக்குவதற்கான அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் ரயில்கள் உடன் கூடுதலாக இந்த புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.