வானில் செயற்கையாக நிலவை உருவாக்கி உலகை
அழிக்கப்போகிறதா சீனா? 

46 Views
Editor: 0

வானில் செயற்கையாக நிலவை உருவாக்கி உலகை அழிக்கப்போகிறதா சீனா? காதில் கேட்டாலே உச்சி முடி சிலிர்க்கிறது!.

வானில் செயற்கையாக நிலவை உருவாக்கி உலகை அழிக்கப்போகிறதா சீனா? காதில் கேட்டாலே உச்சி முடி சிலிர்க்கிறது!

 

எது செஞ்சாலும், நாலு பேரு நம்மை திரும்பி பார்க்கிற மாதிரி செய்ய வேண்டும் என்பது சீனாவின் பாலிசி போல. இந்த விஷயத்தில் நல்லாவே செஞ்சு விட்டாங்க போங்க. ஆனால் இதற்கு முன்னாடியே, உலக நாடுகள் வாயை பிளக்கும் அளவுக்கு ஒரு திட்டம், சீனாவின் கைவசம் இருந்ததாம். கொரோனாவின் வீரியம் கொஞ்சம் அதிகமானதால், பிளான் கேன்சலாகி, கப்பு சுப்புன்னு இருக்காங்களாம். இதுவரைக்கும் எந்த ஊடகங்களிலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாவில்லை என்றாலும், சில ஆங்கில இணையதளங்களில் கிடைத்த தகவலின் அடிப்படையில் உங்களுக்கு இந்த இரகசியத்தை சொல்கிறோம்.

moon china moon-project

விண்வெளியில் செயற்கையாக ஒரு நிலவை உருவாக்கி, சீனாவில் உள்ள, ஒரு நகரத்திற்கு ஒளியை பாய்ச்ச வேண்டும் என்பது தான் திட்டம். இதெல்லாம் சாத்தியமா? சும்மா கப்ஸா விடாதீங்க! என்று நீங்கள் கேட்கிற நேரத்தில், சீனா புதிதாக ஏதாவது ஒன்றை செய்து முடித்திருக்கும். வானில் பறக்கும் விமானத்தை, ஒளியை பாய்ச்சி அழிக்க முடியுமா என்று முதலில் யோசித்துக்கொண்டிருந்தார்கள். லேசர் ஒளிக்கற்றை மூலம் அது சாத்தியமானது அல்லவா? அது போல, எல்லாமே முயன்றால் முடியும்.

moon china moon-project

அதற்காக எல்லாமே முடியும் என்று கூறிக்கொண்டு, உலகையே முடித்துக்கட்ட பிளான் போட்டால், யாருக்குத்தான் கோபம் வராமல் இருக்கும். சீனா அப்படி செயற்கை நிலவை வானில் உருவாக்கும் போது, ஒளி மாசு பன்மடங்கு அதிகாரிக்கும். வானில் பறக்கும் விமானங்களுக்கு சிக்கலை ஏற்ப்படுத்தும். செயற்கை நிலவை உருவாக்க பயன்படுத்தப்படும் கண்ணாடியில் இருந்தும் வெளிவரும் ஒளியானது, பல மடங்கு அடர்த்தியாக பூமியை நோக்கி வந்தடையும்.

moon china moon-project

ஒளி எங்கு அதிகம் குவிக்கப்படுகிறதோ, அந்த இடங்களில் சுற்றுச்சூழல் மாறுபாடு உண்டாகும். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். இயற்கையாக நிகழும் பருவநிலை மாற்றங்கள் தடைபட்டு, சீனா கட்டுப்படுத்தும் இடங்களில் பாருவநிலையை மாற்றியமைக்கும் சக்தி கொண்டதாக மாறும். செயற்கை நிலவு திட்டம் இன்னும் தொடக்க நிலையில் இருப்பதாக கூறப்பட்டாலும், ஒருவேளை சீனா சாதித்து காட்டிவிட்டால், அது உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஹாலிவுட் படத்தில் பார்த்தது எல்லாம், நிஜத்திலும் நடந்து வருவதை காணும் போது கொஞ்சம் ஜெர்க் ஆகத்தான் செய்யுது. உங்களுக்கு எப்படி? 

 

 

உலகச்செய்திகள்