மலேஷியாவில் புதிய வகை வைரஸ் தொற்று:

48 Views
Editor: 0

மலேஷியாவில் புதிய வகை வைரஸ் தொற்று : கொரோனாவை விட 10 மடங்கு வேகமாக பரவும் ஆபத்து; சிவகங்கையை சேர்ந்தவருக்கு தொற்று உறுதி!!.

மலேஷியாவில் புதிய வகை வைரஸ் தொற்று : கொரோனாவை விட 10 மடங்கு வேகமாக பரவும் ஆபத்து; சிவகங்கையை சேர்ந்தவருக்கு தொற்று உறுதி!!

சென்னை : தமிழகத்தில் இருந்து மலேசியா சென்ற ஒருவரின் உடலில் தற்போதைய கொரோனா கிருமியை விட வேகமாக பரவக்கூடிய புதிய வகை வைரஸை அந்நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். D614G என்ற அந்த வைரஸ் கோவிட் -19 வைரஸை விட 10 மடங்கு வேகமாக பரவும் தன்மை உடைய கிருமியாகும். அண்மையில் இந்தியாவில் இருந்து மலேசியா வந்த சிவகங்கையை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரால்தான் இப்புதிய வைரஸ் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், D614G தொற்று இருப்பது அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.

இதுவரை 45 மலேசியாவில் நோயாளிகளிடம் இப்புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் பிலிப்பைன்ஸில் இருந்து மலேசியா திரும்பும் மக்களில் சிலருக்கும் 'D624G'  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே மலேசியாவில் 45 பேருக்கு வைரஸ் பரப்பியதாக தமிழகத்தைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் நிசார் முகமது கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 5 மாதம் சிறை தண்டனையும் ரூ21 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

D614G என்ற தொற்று 10 மடங்கு வேகமாகவும் மிக எளிதாகவும் மற்றவர்களுக்கு பரவி விடும் தன்மையுடையது என்று மலேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வகை கிருமியால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் பிறருக்கு அதிவேகமாக தொற்றை பரப்பும் சூப்பர் ஸ்பிரேடராக இருப்பர் என்றும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. எகிப்திலும் பாகிஸ்தானிலும் ஏற்கனவே இவ்வகை தொற்று ஏற்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில், மலேசியாவும் அந்த பட்டியலில் இணைத்துள்ளது. அபாயகரமான D614G கிருமி தொற்று, தமிழகத்தில் இருந்து மலேசியா சென்றவருக்கு உறுதி செய்யப்பட்டு இருப்பதால் தமிழக அரசை புதிய ஆய்வுகளை நோக்கி தள்ளியிருக்கிறது. 

உலகச்செய்திகள்