உலக அளவில் மிக பெரிய சாதனை படைத்த பெங்களூரு!!
கொரோனாவால் உலக அளவில் நியூயார்க், லண்டன் போன்ற நாடுகள் கூட பொருளாதார
வீழ்ச்சியில் உள்ள இந்த நிலையில் பெங்களூரில் வீடு மதிப்புகள் அதிகரித்துள்ளது.
கொரோனா காரணமாக இந்தியாவில் ஊரடங்கு காரணமாக பொருளாதார நெருக்கடியில்
பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் மட்டும் இன்றி உலகின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது. மேலும் நில மதிப்பு எண்ணெய் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்தும் சரிந்துள்ளது.முக்கியமாக வீட்டு மனைகளின் விலை முற்றிலும் மோசமாக சரிந்துள்ளது. மக்கள் பெருநகர்களை விட்டு வெளியேறுகிறார்கள். மேலும் வீட்டில் இருந்து வேலை செய்து வருகிற நிலையில் பெருநகரங்களில் வீடு மனையின் விலை வேகமாக குறைந்துள்ளது.

இந்த நிலையில் வீடுகளின் மதிப்பு எந்த அளவில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள நைட் ஃபிராங்க் பிரைம் கோலப் சிட்டி (Knight Frank's Prime Global Cities) என்ற நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. வீடுகளின் மதிப்பு குறைந்துள்ளதா இல்லை அதிகரித்துள்ளதா என்று கண்டுப்பிடித்துள்ளது.
இவ்வளவு பொருளாதாரம் சரிந்துள்ள இந்த சூழலில் வீடுகள் மதிப்பு அளவெடுக்கப்படும் பிரைம் ரெசிடெண்ட்ஷியல் மார்க்கெட் மதிப்பில் பெங்களூர் வேகமாக முன்னேறி உள்ளது.
பிரைம் ரெசிடெண்ட்ஷியல் மார்க்கெட் என்பது வீட்டின் மதிப்பு மற்றும் எத்தனை பேர் வீடு வாங்க விரும்புகிறார்கள் என்பதை பொறுத்து நிர்ணயம் ஆகும். உலகம் முழுவதும் பொருளாதாரம் சரிந்தாலும் பெங்களூரில் 0.6% உயர்ந்துள்ளது. மேலும் டெல்லியின் மதிப்பு 0.3% உயர்ந்துள்ளது. மும்பையில் இதன் மதிப்பு 0.6% குறைந்துள்ளது.