விமானம் இரண்டாக பிளக்க என்ன காரணம்? கேரளத்தை ஆட்டிப்படைக்கும் டேபிள் டாப் ரன் வே!

52 Views
Editor: 0

பைக்கில் சென்று சறக்குன்னு பிரேக்பிடிப்பது போல எல்லாம் விமானத்தை கட்டுப்படுத்த முடியாது. மணிக்கு முன்னூறு, நானூறு கிலோமீட்டர் வேகத்தில், கீழிறங்கும் போது, குறைந்த பட்சம் இரண்டு கிலோமீட்டர் தூரமாவது ஓடிய பிறகே நிற்கும்..

விமானம் இரண்டாக பிளக்க என்ன காரணம்? கேரளத்தை ஆட்டிப்படைக்கும் டேபிள் டாப் ரன் வே!

 

பைக்கில் சென்று சறக்குன்னு பிரேக்பிடிப்பது போல எல்லாம் விமானத்தை கட்டுப்படுத்த முடியாது. மணிக்கு முன்னூறு, நானூறு கிலோமீட்டர் வேகத்தில், கீழிறங்கும் போது, குறைந்த பட்சம் இரண்டு கிலோமீட்டர் தூரமாவது ஓடிய பிறகே நிற்கும். அதுவும் பிரேக் எல்லாம் சரியாக வேலை செய்து, விமானியின் சமயோசித புத்தியும் சேர்ந்ததால் மட்டுமே பாதுகாப்பான லேண்டிங்காக இருக்கும். நூல் தப்பினாலும், நூற்றுக்கணக்கான உயிர்கள் ஊசலாடும் நிலையிலேயே ஒவ்வொரு விமான பயணமும் அமைகிறது. 

table-top-runway kerala flight

விமான பயணம் இந்த அளவுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் நேரத்தில், விமான நிலையமும் பாதுகாப்பற்றதாக இருந்தால், நிலை எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். கேரளாவில் கோழிக்கோடு விமானநிலையம், இந்தியாவின் டேஞ்சர் லிஸ்டில் வருகிறது. பொதுவாக எல்லா விமான நிலையமும், சமதள பரப்பில் அமைந்திருக்கும். ஒருவேளை தொழில்நுட்ப கோளாறால், பாதையை விட்டு விலகி ஓடினாலும், ஏதோ ஒரு இடத்தில் சென்று பாதுகாப்பாக நிற்கும்.

table-top-runway kerala flight

ஆனால் டேபிள் டாப் என்று சொல்லப்படும் அமைப்பில் உருவாக்கப்பட்ட விமான நிலையங்களில், இதெல்லாம் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. நம்ம ஊரில் வரப்பு மேல் நடந்து போவதைப் போலத்தான். இரண்டு பக்கமும் வயல் இருக்கும். நடுவில் நடந்து செல்ல மட்டும் திட்டு போன்று இருக்கும் அல்லவா? அது போலத்தான் விமான நிலைய ஓடு பாதை அமைப்பும் இருக்கும். சுற்றிலும் பள்ளமான பகுதியாக இருக்கும். விமானம் இறங்கும், ஓடுதளம் மட்டும் மேடான பகுதியில் இருக்கும்.

table-top-runway kerala flight

ஒரு ஜான் சறுக்கி ஓடுபாதையை விட்டு விலகி ஓடினாலும், பள்ளத்தில் விழுந்து பெரும் இழப்பை சந்திக்க வேண்டி வரும். இந்தியாவில் மூன்று விமான நிலையங்கள் மட்டுமே இந்த மாதிரியான அமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளன. வேண்டும் என்றே இப்படி அமைக்கப்படுவதில்லை. அங்குள்ள நில அமைப்பின் தன்மையை பொறுத்து, வேறு வழியின்றி இந்த மாதிரியான அமைப்பில் உருவாக்கப்படுகின்றன. நன்கு கைதேர்ந்த விமானிகள் மட்டுமே, இந்த மாதிரியான விமான நிலையங்களில் விமானத்தை தரையிறக்க முடியும்.

table-top-runway kerala flight

ஓடுபாதை 3,150 மீட்டர் நீளத்துக்கு அதிகமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் பட்சத்தில், கோழிக்கோடு டேபிள்டாப் விமான நிலையத்தின் ஓடுபாதை வெறும் 2,850 மீட்டர் தூரம் மட்டுமே உள்ளது. ஒவ்வொரு லேண்டிங்கும் சவால் நிறைந்ததாக இருக்கும். அப்படி இருக்கும் போது, கனமழையும் சேர்ந்து கொண்டால் நிலை என்ன ஆகும்.? அதன் விளைவே, துபாயில் இருந்து வந்த விமானம் விபத்தை சந்திக்க நேர்ந்துள்ளது.

table-top-runway kerala flight

பாதையை விட்டு விலகி, தடுப்பு சுவரில் மோதிய பிறகும், நிற்காமல் சென்று குன்றில் இறங்கியுள்ளது. மோதிய வேகத்தில் இரண்டாக பிளந்த விமானம், நல்ல வேளையாக தீப்பற்றவில்லை. இது போன்ற விபத்துகளில், தீப்பற்றுவதால் தான், அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. கோழிக்கோடு சம்பவத்தை பொறுத்தவரைக்கும் அந்த மாதிரியான அசம்பாவிதம் நடக்கவில்லை. இதே போல, டேபிள் டாப் ஓடுதளம் கொண்ட மங்களூரு விமான நிலையத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு பெரிய அளவில் விபத்து இடம்பெற்ற நிலையில், டேபிள் டாப் ஓடுதள அமைப்பில் இனி விமான நிலையங்கள் அமைப்பதை தவிர்த்து, பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

உலகச்செய்திகள்