கொரோனா தடுப்பு மருந்து...1 பில்லியன் டாலர் நிதி திரட்டுகிறது... சீரம் இன்ஸ்டிடியூட்!!

30 Views
Editor: 0

மும்பை: கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க ஒரு பில்லியன் டாலர் நிதி திரட்டுவதற்காக பிளேக்ஸ்டோன், கேகேஆர் ஆகியவற்றுடன் சீரம் இன்ஸ்டிடியூட் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது..

கொரோனா தடுப்பு மருந்து...1 பில்லியன் டாலர் நிதி திரட்டுகிறது... சீரம் இன்ஸ்டிடியூட்!!

மும்பை: கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க ஒரு பில்லியன் டாலர் நிதி திரட்டுவதற்காக பிளேக்ஸ்டோன், கேகேஆர் ஆகியவற்றுடன் சீரம் இன்ஸ்டிடியூட் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து சீரம் நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் இந்த நிறுவனம்தான் கொரோனா தடுப்பு மருந்தை சப்ளை செய்யவிருக்கிறது.

புனேவில் இருக்கும் இந்த நிறுவனம் சைரஸ் பூனாவாலா அவரது மகன் அடர் பூனாவாலாவுக்கு சொந்தமானது. திரட்டும் முதலீடு அனைத்தும் இந்த நிறுவனத்துக்கே பயன்படுத்தப்படும்.

இதுகுறித்து சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தெரிவித்து இருக்கும் செய்தியில், ''சில முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்'' என்று தெரிவித்துள்ளனர். ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவிக்க பிளேக்ஸ்டோன் மற்றும் கேகேஆர் மறுத்துவிட்டன.

முன்னதாக பில் மெலிந்தா கேட்ஸ் பவுண்டேஷனிடம் இருந்து சீரம் இன்ஸ்டிடியூட் 150 மில்லியன் டாலர் அளவிற்கு நன்கொடை பெற்று இருந்தது. ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து சப்ளை செய்ய இந்த நிறுவனத்துக்கு நன்கொடை வழங்கப்பட்டு இருந்தது. ஆஸ்ட்ராஜெனிகா - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து இந்த தடுப்பு மருந்தை தயாரிக்கின்றன. ஒவ்வொரு மாதமும் 100 மில்லியன் டோஸ் மருந்து தயாரிக்க சீரம் முடிவு செய்துள்ளது.

ஆஸ்ட்ராஜெனிகா- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் சொந்த ரிஸ்க்கில் சீரம் இன்ஸ்டிடியூட் 200 மில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது. இந்திய அரசாங்கத்திடமும் இந்த நிறுவனம் எந்தவித ஒப்பந்தங்களையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

 

உலகச்செய்திகள்