உலக நாடுகளின் தலைவர்கள் பின்பற்றும் இந்திய முறை வணக்கம்:
கொரோனா காரணமாக தற்போது பலரும் கைகுலுக்கி வணக்கம் சொல்வதை தவிர்த்து, கைகூப்பி வணக்கம் சொல்கின்றனர்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரனை சந்திக்கச் சென்ற ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலுக்கு இந்திய முறைப்படி கைகூப்பி வணங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொரோனா ஊரடங்குக்கு பிறகு உலக நாடுகள் தனிநபர் இடைவெளி மற்றும் இந்திய முறைப்படி கைகூப்பி வணங்குவதை பழகிக்கொண்டுள்ளனர்.
உலகின் பல நாடுகளிலும் கைகுலுக்கும் பழக்கத்துக்கு பதிலாக வணங்குவது அதிகரித்து வருகிறது. ஏஞ்சலா மெர்மெல்- இமானுவேல் மேக்ரன் பரஸ்பரம் கைகூப்பி வணங்கிய வீடியோவை இந்தியர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.