அடுத்த அதிரடி!!.. தனது நாட்டு நாணயத்தை வெளியிட்டார் நித்தி!! விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!!
கைலாச நாட்டின் வர்த்தக நாணயங்களை வெளியிட்டார் நித்யானந்தா.
சென்ற வாரம் நித்யானந்தா வெளியிட்ட வீடியோவில் அவர் இன்று முக்கிய செய்தி ஒன்றை வெளியிட போவதாக கூறி இருந்தார். அந்த வீடியோவில் தான் கைலாச நாட்டில் தனியாக வங்கி ஆரம்பித்துள்ளதாக அவர் கூறியிருந்தார்.கைலாசா நாட்டிற்கான புதிய கரன்சி அச்சிட பட்டுள்ளதாகவும், உள் நாட்டிற்க்கு ஒரு கரன்சியும், வெளிநாட்டிற்க்கு ஒரு கரன்சியும் அச்சிட பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் நிறைய நன்கொடைகள் கிடைத்திருப்பதால் அதனை நல்ல காரியத்திற்கு பயன்படுத்தலாம் என வங்கி ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனையொட்டி விநாயகர் சதுர்த்தயானா இன்று அவர் நாட்டின் வர்த்தக நாணயங்களை இன்று வெளியிட்டார். அவர் வெளியிட்ட புதிய கரன்சி வைரலாகி வருகிறது.