உங்களது பர்ஸ் அல்லது கைப்பை தொலைந்து போகாமல் இருக்க வேண்டுமா? இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி பாருங்களேன்!
ஒரு சில உளவியல் உண்மைகள், 'இப்படி கூட இருக்குமா?' என நம்மை வியக்க வைக்கும். அப்படி உள்ள சில அரிதான உளவியல் உண்மைகள்.
குழந்தை போட்டோ இருக்கும் கைப்பை அல்லது பர்ஸ் தொலைந்து போனால், அது திரும்ப கிடைக்க 99% வாய்ப்புகள் உள்ளதாம். பெரும்பாலும் தொலைந்து போகாதாம். வேண்டுமென்றால் உங்களது பர்ஸ்ஸிலும் ஒரு போட்டோவை வைத்து சோதித்து பாருங்களேன்!
பலர் இரவு நேரத்தில் தான் போர்வையை போர்த்தி கொண்டு அ ழுவார்கள். ஏன் என்றால் எல்லா வேலையையும் முடித்துவிட்டு இரவு தூங்கும் போது, உடனே தூக்கம் வராமல் சில நிமிடங்கள் மனம் அடுத்து என்ன செய்ய போகிறோம்? ஏன் இப்படி நடந்தது என யோசித்து கொண்டிருக்கும். அப்போது உணர்ச்சிகள் கட்டுப்படுத்த முடியாமல் அழுகையாக வெளியேறிவிடும். அதனாலே இரவு நேரத்தில் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது என ஒரு கூற்று உண்டு.
ஜெயிண்ட் வீல் போன்ற ராட்சத ராட்டினத்தில் சிலர் ஏற பயப்படுவார்கள். ஆனால் பயந்து கொண்டே ஏறி விடுவார்கள் ஏன் தெரியுமா? நமது மனம் பயப்படும் ஒரு விஷயத்தை செய்து முடித்த பின்னர் எல்லை கடந்த மகிழ்ச்சியை உணருமாம்.
அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்டால் கண்டிப்பாக வியப்பீர்கள். குரூப்பில் உள்ள ஒரு ஆள் மட்டும் எப்போதுமே கேலி, கிண்டல், டபுள் மீ னிங் காமெடி எல்லாவற்றையும் விரைவில் புரிந்து கொண்டு சிரிப்பார். அதுபோன்ற நபர்கள் தான் எப்போதுமே, மற்றவர்களை சரியாக கணித்து வைத்திருப்பார்களாம்.
எப்போதுமே பலவீனமாக உள்ள நபர்கள் தான் மற்றவர்களை அதிகமாக அ வமானம் படுத்துவார்களாம். அதுவும் தன்னை விட பலம் குறைவானவர்களிடம் தான் தன்னுடைய வீரத்தை காட்டுவார்களாம்.
பெண்கள் ஆண்களை விட அதிகமாக அதாவது இரண்டு மடங்கு கண் சிமிட்டுவார்களாம். இதையெல்லாம் பார்த்து தான் நம்ம பசங்க பெண்கள் கண் அடிப்பதாக நினைத்து கொள்கிறார்கள்.
கற்பனை திறன் அதிகம் உள்ளவர்கள் எப்போதுமே தனியாகவும் அமைதியாகவும் இருப்பதையே விரும்புவார்களாம். அவர்கள் தேர்ந்தெடுக்கும் விளையாட்டுக்கள் கூட மூளை தொடர்பானதாக தான் இருக்குமாம்.
சிலர் பார்க்க மிகவும் ட்ரெண்டியாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் கேட்கும் பாடல்கள் அனைத்தும் பெரும்பாலும் பழையதாக இருக்கும். ஏனெனில் அந்த பாடலின் இசை மற்றும் வரிகள் ஏதேனும் ஒருவகையில் அவர்களது பழைய நினைவுகளை கிளறும் வகையில் அமைந்திருக்கும் அதனாலே அவர்கள் பழைய பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள்.
நாம் ஒருவரிடம் பொய் சொல்லும் போது நமது கண்கள் தன்னை அறியாமல் இடது பக்கம் நோக்கி திரும்புமாம். இந்த ஃபார்முலாவை புருஷனிடம் அப்ளை செய்ய வேண்டும் என்கிறதா மனம்?