ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 01-ந்தேதி உலக சைவ தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது

67 Views
Editor: 0

உலகெங்கிலும் உள்ள சைவ உணவு உண்பவர்கள் உலக சைவ தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். இந்த சைவ தினம்.

நவம்பர் 01
உலக சைவ தினம்

ஒவ்வொரு ஆண்டும் 
நவம்பர் 01-ந்தேதி உலக சைவ தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

உலகெங்கிலும் உள்ள சைவ உணவு உண்பவர்கள் உலக சைவ தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். இந்த சைவ தினம், இறைச்சி, முட்டை அல்லது பிற விலங்கு பொருட்களை மட்டும் தவிர்க்கும் சைவர்களுக்கு (Vegetarian) இல்லை. பால், தயிர், பன்னீர் போன்ற பால் பொருட்களையும் தவிர்த்து முழு பச்சை உணவை மட்டும் சாப்பிடும் சைவர்களுக்கானது (Vegan).

1944-ம் ஆண்டு நவம்பர் மாதம் உருவாக்கப்பட்ட சைவ சங்கத்தின் 50வது ஆண்டு பொன்விழா 1994-ம் ஆண்டு நவம்பர் 01-ந்தேதி இங்கிலாந்தில் வைத்து நடந்தது. 

இந்த பொன்விழாவைக் குறிக்கும் வகையிலேயே 
நவம்பர் 01-ந் தேதி உலக சைவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

சைவ உணவினை எடுத்துக்கொள்வதால் மேம்படும் ஆரோக்கியம் மற்றும் அதன் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதை மேம்படுத்தவும் உலக சைவ தினம் கடைபிடிக்கப்படுகிறது

உலகச்செய்திகள்