மெக்ஸிகோவில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற ‘மிஸ் யுனிவா்ஸ்’ இறுதிப் போட்டியில் டென்மாா்க்கின் விக்டோரியா கியாா் தில்விக் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார்.
120 போ் பங்கேற்ற இப்போட்டியில் நைஜீரியாவை சோ்ந்த சிதிம்மா அடட்ஷினா இரண்டாவது இடத்தையும், மெக்ஸிகோவை சோ்ந்த மரியா ஃபொ்னாண்டா பெல்ட்ரான் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.