ஏ.டி.எம் பயன்பாட்டை குறைத்த டிஜிட்டல் பணபரிவர்த்தனை

38 Views
Editor: 0

இந்தியா டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், முதல்முறையாக கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில், ஏ.டி.எம் மூலம் ரொக்கமாக பணம் எடுப்பதை விட, டிஜிட்டல் மூலம் பணபரிவர்த்தனை செய்வது அதிகரித்துள்ளது..

புதுடில்லி: இந்தியா டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், முதல்முறையாக கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில், ஏ.டி.எம் மூலம் ரொக்கமாக பணம் எடுப்பதை விட, டிஜிட்டல் மூலம் பணபரிவர்த்தனை செய்வது அதிகரித்துள்ளது.

2019-20ம் நிதியாண்டில் ஜன., முதல் மார்ச் வரையிலான காலத்தில், கார்டு மற்றும் மொபைல் மூலம் ரூ.10.57 லட்சம் கோடி ரூபாய் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. ஆனால் ஏ.டி.எம் மூலம் ரூ.9.12 லட்சம் கோடி ரொக்க பணமாக எடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டிலும், கார்டு மற்றும் மொபைல் செலுத்துதல் மூலம் ரூ.10.97 லட்சம் கோடி பரிவர்த்தனை நடந்துள்ளது. ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்பது மேலும் 5 சதவீதம் குறைந்து ரூ.8.66 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அமலான ஊரடங்கு, இந்த மாற்றதை விரைவான பாதையில் கொண்டு வந்துள்ளது.

latest tamil news

இதனை பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிந்தைய சூழலோடு ஒப்பிட கூடாது. கொரோனா தொற்று இன்னமும் எவ்வளவு காலத்திற்குள் முடிவுக்கு வருமென யாருக்கும் தெரியாது. எதிர்கால வணிக நிறுவனங்கள், ரொக்கமாக பரிவர்த்தனை செய்ய முடியாது. எளிதாக இருப்பதோடு, விரைவாகவும், பாதுகாப்பாகவும் வணிகம் செய்ய முடியும் என்பதோடு, பல நிறுவனங்களில் போதுமான உள்கட்டமைப்பு இருப்பதால், பணத்திற்கு மீண்டும் திரும்புவார்கள் என்று எதிர்ப்பார்க்கவில்லை' என கோடக் மகிந்திரா வங்கியின் துணை தலைவரான சேகர் பண்டாரி தெரிவித்துள்ளார்.

மேலும் சில்லறை விற்பனை, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் அமைப்பு சாரா வணிக துறைகளில் டிஜிட்டல் மயமாக்கல் காணப்படுகிறது. 5 முதல் 6 ஆண்டுகளாக டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு செல்லாத பல வாடிக்கையாளர்கள், 20 நாட்களுக்குள் மாறியுள்ளனர். இந்த நெருக்கடியில் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் பயனை பெற்றுள்ளது. அதே நேரம் வணிக தொடர்ச்சிக்கும் மிகப்பெரிய உதவி செய்துள்ளது எனவும் அவர் கூறினார்.

latest tamil news

மொபைல் ரீசார்ஜ்கள், சேவை கட்டணம் செலுத்துதல் முதல் ஆன்லைன் இ-காமர்ஸ் வரை, யுபிஐ (Unified Payments Interface), கார்டுகளுக்கு பிரபலமான மாற்றாக மாறி வருகிறது. ஒரு நபருக்கு அவர்களின் அட்டை விவரங்கள், சி.வி.வி எண் போன்றவற்றைப் பகிர்வது எப்போதும் வசதியாக இருக்காது. மேலும் இது மிகவும் சிக்கலான செயல்முறையாகும். யுபிஐ பரிவர்த்தனைகள் அனைத்து வங்கி விவரங்களையும் மறைக்கும் கூடுதல் பாதுகாப்பை கொண்டுள்ளதால், வேகமாகவும் தடையற்றவையாகவும் இருக்கின்றன,' என என்.பி.சி.ஐ எனப்படும் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா கூறியுள்ளது.

 

​​​​​​

தொழில்நுட்பச் செய்திகள்