JioMart App ஏற்கனவே பீட்டா வெர்ஷனில் துவங்கப்பட்ட நிலையில், தற்போது கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் எல்லோரும் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
பீட்டா வெர்ஷன் JioMart மார்ச் மாத இறுதியில் 200 நகரங்களில் தனது ஆன்லைன் விற்பனையைத் தொடங்கியது. தற்போது ப்ளேஸ்டோர்களில் அறிமுகமாகியுள்ளதன் மூலம், நாடு முழுவதும் இதன் வரவேற்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆப்-ஐ வெளியிட்டு சில நாட்களிலேயே 10 லட்சம் பேர் டவுன்லோட் செய்துள்ளனர்.
வீட்டுத்தேவை பொருட்கள், குழந்தைக்கான தேவைகள், மளிகைப் பொருட்கள், பூஜைப் பொருட்கள், பெர்சனல் கேர் பொருட்கள் என அனைத்தும் கிடைப்பதாலும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீது குறைந்தபட்சம் 5 சதவிகிதம் தள்ளுபடி விலையில் கிடைப்பதாலும், சந்தையில் இதற்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
Cash on delivery உட்பட, ஆன்லைன் கட்டணத்தில் உள்ள அனைத்து கார்டுகள் மற்றும் யூபிஐ ஆப்ஷன்களும் ஜியோ மார்ட் ஆப்பில் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் JioMart குறித்து பேசிய ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, ஜியோமார்ட்டில் தினமும் 2 லட்சம் ஆர்டர்கள் குவிவதாகவும், இது அதிகரித்துக்கொண்டே இருக்கும் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.2024-இல் சந்தையில் முதன்மையான இடத்தை ஜியோமார்ட் 50 சதவிகிதம் பங்குகளுடன் இடம்பிடிக்கும் என சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.