கிராமத்தில் இருப்பவரா நீங்கள்? வீட்டிலிருந்தே சம்பாதிக்க அரசின் திட்டம் ஒன்று உள்ளது தெரியுமா?
பல மக்கள் தங்கள் கிராமத்தில் இருந்தே சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால், வேலைவாய்ப்பின்மையால் பலர் கிராமத்திலிருந்து விலகிச் சென்று நகரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். தற்போது, கொரோனா தொற்று பரவுவதால், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் கிராமங்களுக்கே மீண்டும் வந்துள்ளனர்.
அவர்களில் பலர் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள், ஆனால் பலர் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாத நிலைமை உள்ளது. நீங்களும் படித்தவர்களாகவும் இருந்து, கிராமத்திலிருந்தே ஏதாவது செய்ய விரும்பினால், அரசாங்கம் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு திட்டத்தைக் கொண்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
அரசாங்கத்தின் டிஜிட்டல் இந்தியாவின் கீழ், உங்கள் கிராமத்தில் ஒரு பொது சேவை மையத்தைத் திறப்பதன் மூலம் நீங்கள் வருமானத்தை ஈட்டலாம். இந்த திட்டத்தின் நோக்கம் கிராமப்புற இளைஞர்களை தொழில்முனைவோராக்குவதும், டிஜிட்டல் இந்தியாவின் நன்மைகளை கிராமங்களுக்கு கொண்டு வருவதும் தான். இதன் செயல்முறை பற்றி தெரிந்து கொள்வோம்.
நீங்கள் ஒரு சாதாரண சேவை மையத்தைத் திறக்கத் தயாராக இருந்தால், கணினியை எவ்வாறு இயக்குவது என்பது உங்களுக்குத் தெரிந்தால், முதலில் register.csc.gov.in க்குச் சென்று பொது சேவை மையத்திற்கு பதிவு செய்யுங்கள். பதிவு செய்யும் போது, நீங்கள் ரூ.1,400 செலுத்த வேண்டி இருக்கும்.
பதிவின் போது, நீங்கள் மையத்தைத் திறக்க விரும்பும் இடத்தின் புகைப்படத்தையும் பதிவேற்ற வேண்டும். படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, ஒரு ID யைப் பெறுவீர்கள், அதில் இருந்து உங்கள் விண்ணப்பத்தைக் கண்காணிக்க முடியும்.
விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்குப் பிறகு, உங்களுக்கு ஒரு சான்றிதழ் கிடைக்கும். சான்றிதழுடன், சாதாரண சைபர் மையத்திற்கு கிடைக்காத பல சேவைகள் உங்களுக்கு கிடைக்கும்.
உங்கள் மையத்தில் ஆன்லைன் பாடநெறி, CSC மார்க்கெட், விவசாய சேவைகள், இ-காமர்ஸ் விற்பனை, ரயில் டிக்கெட், விமானம் மற்றும் பஸ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதோடு ஆன்லைன், மொபைல் மற்றும் டி.டி.எச் ரீசார்ஜ் வேலைகளையும் செய்யலாம். இது தவிர, பான் கார்டு தயாரித்தல், பாஸ்போர்ட் தயாரிப்பது உள்ளிட்ட பல அரசு வேலைகளை நீங்கள் செய்ய முடியும். இந்த பணிகளுக்கு அரசாங்கம் உங்களிடமிருந்து பணம் எதுவும் பெறாது. உங்கள் கிராமத்திற்கு ஏற்ப வேலை செலவை நீங்களே தீர்மானிக்கலாம்.
அப்புறம் என்னங்க, உங்கள் ஊர் மக்களுக்கு சேவை செய்த மாறியும் ஆகியாச்சு, உங்களுக்கு வருமானம் வந்த மாறியும் ஆகியாச்சு. சம்பாதித்து சந்தோசமாக இருங்கள்.