கொரோனா காலத்திலும் ஊதிய உயர்வு? யாருக்கு தெரியுமா??

34 Views
Editor: 0

ஊரடங்கால் பெருமளவு நஷ்டத்தை சந்தித்தாலும் சம்பளத்தை குறைப்பதற்கு பதிலாக சம்பள ஊயர்வு மற்றும் பதவி உயர்வை வழங்க கார் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்..

கொரோனா காலத்திலும் ஊதிய உயர்வு? யாருக்கு தெரியுமா??

 

ஊரடங்கால் பெருமளவு நஷ்டத்தை சந்தித்தாலும் சம்பளத்தை குறைப்பதற்கு பதிலாக சம்பள ஊயர்வு மற்றும் பதவி உயர்வை வழங்க கார் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கிட்டத்தட்ட 4 மாத காலமாக இந்தியாவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு ஏராளமான மக்கள் வேலையிழந்ததுடன், பொருளாதார நிலையும் படு மோசமாக பாதிக்கப்பட்டு பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.

கார்களின் விற்பனையும் பெருமளவு சரிந்து மாபெரும் வாருவாய் இழப்பை சந்தித்துள்ளன பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்கள். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றான மாருதி சுசூக்கி கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு கார் கூட விற்பனையாகாத, வரலாறு காணாத நிகழ்வும் நிகழ்ந்தது. வருவாய் இழப்பை ஈடு செய்ய, ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு போன்ற நடவடிக்கையில் கார் தாயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபடும் என்று எதிபார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மாற்றாக ஊழியர்களுக்கு சம்பள ஊயர்வு மற்றும் பதவி உயர்வை வழங்கி வருகிறார்கள். இந்தியாவில் மொத்தம் உள்ள 14 கார் தயாரிப்பு நிறுவனங்களில் 10 நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது.

அதன்படி, பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களான ஹோண்டா, டொயோட்டா மற்றும் ரெனால்ட் ஆகிய நிறுவனங்கள் தனது தொழிலாளர்களுக்கு 4 முதல் 14 சதவீத ஊதிய உயர்வை அறிவித்துள்ளன. மாருதி சுசுகியோ அடுத்த 2 மாதங்களில் தனது ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் சலுகைகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. எம்ஜி மோட்டார் நிறுவனமோ தனது ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொழில்நுட்பச் செய்திகள்