Google People Card... உங்களுடைய ஆன்லைன் விசிட்டிங் கார்டு! பெறுவது எப்படி?

11 Views
Editor: 0

ஏற்கனவே நிறுவனங்களுக்கும் பிரபலங்களுக்கும் 'Knowledge Panel' என்ற வசதியை கூகுள் வழங்குகிறது. .

Google People Card... உங்களுடைய ஆன்லைன் விசிட்டிங் கார்டு! பெறுவது எப்படி?

 

ஏற்கனவே நிறுவனங்களுக்கும் பிரபலங்களுக்கும் 'Knowledge Panel' என்ற வசதியை கூகுள் வழங்குகிறது. ஒரு பிரபலத்தைப் பற்றி நீங்கள் கூகுளில் தேடும்போது, வலதுபக்கம் அந்த பிரபலத்தைப் பற்றிய சுருக்கமான அறிமுகம், முகவரி, இணையதளம் மற்றும் சமூக ஊடக முகவரிகள் என முக்கியமான விஷயங்களை தனித்துக் காட்டும். இதன் மூலம் தேவையான விஷயங்களை எளிதாகப் பெறமுடியும்.

இப்போது, இந்த வசதியின் இன்னொரு வடிவத்தை இந்தியாவில் அனைவருக்குமானதாக அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். உங்கள் பெயரை கூகுளில் யார் தேடினாலும் உங்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு இனி கிடைக்கும். இந்த வசதிக்கு 'People Card' என பெயர் சூட்டியிருக்கிறது கூகுள்.

 

தொழில்நுட்பச் செய்திகள்