அடுத்த ஆண்டு முதல் இந்திய குடிமக்களுக்கு இ-பாஸ்போர்ட்கள் வழங்க அரசாங்கம் ஏற்பாடு! | முழு விவரம் அறிக
மிக நீண்ட காலமாக, நம் பாஸ்போர்ட்டுகள் எல்லாம் ஒரு சிறிய புத்தகம் போலவே இருக்கின்றன, ஏதாவது தகவல் தேவை என்றால், அதைப் புரட்டிப்பார்த்துதான் கண்டுபிடிக்க வேண்டும். அவசரமாக கிளம்பும்போது மறந்துவிட்டாலும் பெரிய சிக்கல் ஆகிவிடும். ஆனால், இனி அந்த சிக்கல் எல்லாம் இல்லை.
இந்திய அரசு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இ-பாஸ்போர்ட்கள் வழங்க ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, நீங்கள் 2021 ஆம் ஆண்டில் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால், அல்லது உங்களுடைய முந்தைய பாஸ்போர்ட்டே மீண்டும் வழங்கப்பட்டால், நீங்கள் ஒரு இ-பாஸ்போர்ட்டைப் பெறலாம்.
இ-பாஸ்போர்ட்டுகள் உட்பொதிக்கப்பட்ட நுண்செயலி சிப் (embedded microprocessor chip) உடன் வரும், மேலும் விமான நிலையங்களில் செயல்முறைகளை விரைவாக முடிக்க அனுமதிக்கும். அரசாங்கம் ஏற்கனவே வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இ-பாஸ்போர்ட்டுகளை பரிசோதித்து வருகிறது, மேலும் சோதனை கட்டத்தில் இதுவரை 20,000 இ-பாஸ்போர்ட்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது, இந்த இ-பாஸ்போர்ட்டுகளை நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
இ-பாஸ்போர்ட்டுகள் சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பின் தரத்தை (International Civil Aviation Organisation standard) அடிப்படையாகக் கொண்டு அவை வெவ்வேறு நாடுகளில் இயங்குவதை உறுதிசெய்யும், இது வெளிப்படையாக, பாஸ்போர்ட்டின் முக்கிய செயல்பாடாகும்.
இந்த திட்டத்திற்கான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பைக் கட்டமைக்க ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இ-பாஸ்போர்டுகளுக்கு பிரத்யேக யூனிட்டுகளை அமைப்பதற்கும் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் பொறுப்பாகும். ஒரு மணி நேரத்திற்கு 10,000 முதல் 20,000 இ-பாஸ்போர்ட்களை எங்குவேண்டுமானாலும் வழங்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
புதிய முறை அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் இருக்கும் பாஸ்போர்ட் வழங்கல் அமைப்பில் இணைக்கப்படும். தற்போதுள்ள பாஸ்போர்ட் வழங்கல் அமைப்புகளுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல், பாஸ்போர்ட் வழங்குவதற்கு தேவையான நேரத்தை அதிகரிக்காமல் புதிய முறையை இணைக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.