'இலவச தேடல் சேவையை இழக்க நேரிடும்': ஆஸ்திரேலியாவுக்கு கூகுள் எச்சரிக்கை

14 Views
Editor: 0

கான்பெர்ரா: 'டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் கூகுள் போன்ற தளங்கள், செய்திகளுக்காக தனியான கட்டணம் செலுத்த வேண்டும்..

'இலவச தேடல் சேவையை இழக்க நேரிடும்': ஆஸ்திரேலியாவுக்கு கூகுள் எச்சரிக்கை

 

கான்பெர்ரா: 'டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் கூகுள் போன்ற தளங்கள், செய்திகளுக்காக தனியான கட்டணம் செலுத்த வேண்டும்' என்ற திட்டத்தை கையில் எடுத்திருக்கும் ஆஸ்திரேலிய அரசின் முடிவுக்கு, கூகுள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற வணிக ரீதியாகச் செயல்படும் ஊடக நிறுவனங்களிடம் இருந்து, செய்திகளுக்கு எனக் கட்டணம் வசூலிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை கொண்டுவர ஆஸ்திரேலிய அரசு கடந்த வாரம் திட்டமிட்டது. இதன் மூலம், கூகிள் மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்களின் 6 பில்லியன் டாலர் விளம்பர வருவாய், செய்தி நிறுவனங்களுக்குச் செல்ல நேரிடும்.


latest tamil news

இதையடுத்து, அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம், ஆஸ்திரேலிய மக்களுக்கு 'திறந்த கடிதம்' என்ற எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், 'செய்தித் தகவல்களுக்குக் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டால், ஆஸ்திரேலியாவில் இலவச தேடல் சேவையை இழக்க நேரிடும். பயனர்களின் தகவல்கள் ஊடக நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்' என, கூகுள் எச்சரித்துள்ளது.

 

தொழில்நுட்பச் செய்திகள்