வல்லரசு நாடுகளை பின்னுக்குத்தள்ளிய இந்தியா...! எதில் தெரியுமா...?

12 Views
Editor: 0

இந்தியாவில் இன்டர்நெட்டின் தரம் மிகக் குறைவாக இருப்பதாகவும் அதே நேரத்தில், சாமானியர்களுக்கும் கிடைக்கும் வகையில் விலை குறைவாக இருப்பதாகவும் சர்வதேச ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

வல்லரசு நாடுகளை பின்னுக்குத்தள்ளிய இந்தியா...! எதில் தெரியுமா...?

இந்தியாவில் இன்டர்நெட்டின் தரம் மிகக் குறைவாக இருப்பதாகவும் அதே நேரத்தில், சாமானியர்களுக்கும் கிடைக்கும் வகையில் விலை குறைவாக இருப்பதாகவும் சர்வதேச ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு வெகு வேகமாக அதிகரித்து தற்போது 70 கோடி பயனாளர்கள் உள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் செல்போன் வாயிலாக இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப்பெரும் ஆன்லைன் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. எனினும் இந்தியாவில் இன்டர்நெட்டின் தரம் மற்றும் கட்டமைப்பு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என பிரபல ஆன்லைன் நிறுவனமான சர்ப்ஷார்க் தெரி்வித்துள்ளது.

உலகில் 85 நாடுகளில் இன்டர்நெட்டின் தரம் பற்றிய டிஜிட்டல் குவாலிட்டி ஆப் லைப் இன்டெக்ஸ் ஆய்வின் முடிவில், இன்டர்நெட் சேவை தரத்தில் இலங்கை, குவாடமாலா போன்ற நாடுகளுடன் 79வது இடத்தில் இந்தியா இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகளவில் முதலிடத்தை டென்மார்க் பிடித்திருப்பதாகவும், ஆசியாவில் ஜப்பானும், அமெரிக்க கண்டத்தில் கனடாவும், ஆப்பிரிக்க கண்டத்தில் தென்னாப்பிரிக்காவும் இன்டர்நெட் சேவைத் தரத்தில் முதலிடத்தில் இருப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்டர்நெட் சேவையின் வேகம், மந்தமாகவும், சீரற்றதாகவும் இருப்பதாலேயே தரவரிசைப்பட்டியலில் கடைசி படிக்கு தள்ளப்பட்டிருப்பதாக க சர்ஃப் ஷார்க் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், மக்களுக்கு குறைந்த விலையில் இன்டர்நெட்டை வழங்குவதில் உலகில் 9வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இவ்விஷயத்தில் அமெரிக்கா, சீனா மற்றும் இங்கிாந்து போன்ற பல நாடுகளை இந்தியா பின்னுக்குத் தள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது.  செல்போன் சேவை வழங்கும் ஜியோ போன்ற நிறுவனங்களின் வருகைக்குப்பிறகு இன்டர்நெட் கட்டணம் சரிவடைந்தது மிக முக்கிய காரணமாகும். மக்களுக்கு வழங்கும் டிஜிட்டல் சேவை அதாவது மின்ஆளுகையில் 15வது இடத்தை இந்தியா பிடித்திருப்பது சற்று ஆறுதலாக உள்ளது.

தொழில்நுட்பச் செய்திகள்