#Mobile: இப்போது வாங்கும் ஸ்மார்ட்போன்கள் ஏன் இரண்டு வருடங்கள் கூட தாக்குப்பிடிப்பதில்லை? காரணம் தெரிந்தால் கடை பக்கமே போகமாட்டோம்!
அப்பா 2011ல் வாங்கிய மொபைலை தான் இன்னும் யூஸ் பண்றாங்க. நான் 2018ல் வாங்கிய விவோ செல்போனில் வாட்ஸ்ஆப் ஓபன் பண்ணவே போராட வேண்டி இருக்கு. காலையில் பேட்டரி போட்டால், அரை நாள் கூட தாக்குப்பிடிப்பதில்லை. முன்பு எல்லாம், ஒருமுறை ஃபுல் சார்ஜ் போட்டால், இரண்டு நாட்களுக்கு தாங்கும். இனி வாங்கும் மொபைல் எல்லாம் இரண்டு வருடம் தாக்குப்பிடித்தாலே அது பெரிய விஷயம் என்பது போல ஆகப்போகிறது.
2015க்கு முன்னர் வரைக்கும் பெரிதாக ஸ்மார்ட்போன்கள் பிரபலமடையவில்லை. சாம்சங், நோக்கியா, மோட்டரோலா, ஆஸுஸ் மாடல் மட்டுமே சந்தையில் பிரபலமான மாடலாக இருந்தது. எங்கு சென்றாலும் உதிரி பாகம் கிடைக்கும். செலவும் சிக்கனமாக இருந்தது. இப்போ பேட்டரி கூட இன்பில்ட்டாக மட்டுமே வருகிறது. மெம்மரி கார்டு சிம்கார்டு போடுவது கூட, சிக்கலாக மாற்றப்பட்டுள்ளது. செல்போனுக்கு ஏதாவது என்றால், கடைக்கு தூக்கிக்கொண்டு ஓட வேண்டும்.
எல்லாமே வியாபார தந்திரத்தின் அடுத்த படிநிலை தான். ஸ்மார்ட்போன்களுக்காக உருவாக்கப்படும் மொபைல் ஆப் கூட, ரேம், மெமரிகளை மெல்ல மெல்ல ஆக்கிரமித்து, ஒரு கட்டத்தில் ஆமை வேகத்தில் இயங்க வைக்கும். இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்னர் 50 எம்.பி கேம், மொபைல் ஆப் என்றாலே, அதனை பெரிய விஷயமாக பார்ப்போம். இப்போது ஜி.பி கணக்கில் கேம் அசால்டா வருது. இதை விட வியர்வை, மழை தூர்ல், குளிர் காற்றிலுள்ள ஈரப்பதம் போன்றவை உட்புகுந்து மதர் போர்டு சீக்கிரம் துருப்பிடிக்க ஆரம்பிக்கிறது.
நீடித்து உழைக்கும் ஸ்மார்ட்போன்களில் மிகுதியான சிறப்பம்சங்கள் இருக்காது. விளம்பரம் இருக்காது. ஆனால் வாடிக்கையாளர்களை ஏமாற்ற மாட்டார்கள். இதெல்லாம் தாண்டி, இந்திய மார்கெட்டில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் 95 சதவீதம் சீனாவில் தயாராகின்றன. போனின் விற்பனை விலையை விட, அதன் உண்மையான விலை நான்கு மடங்கு குறைவாக இருக்கும். அப்படி பார்த்தால், அதனுள் இருக்கும் பாகங்களின் விலையும், தரமும் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்க்க முடிகிறதா?