சாம்சங் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புது விவரங்கள்

30 Views
Editor: 0

சாம்சங் நிறுவனம் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புது விவரங்கள் வெளியாகி இருக்கிறது..

சாம்சங் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புது விவரங்கள்:

 

சாம்சங் நிறுவனம் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புது விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை உருவாக்கி வருவதாக இணையத்தில் தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் பிரீமியம் மிட்-ரேன்ஜ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

 

இந்த சாதனம் SM-F415 எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதும், இது வைபை அலையன்ஸ் சான்று பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சாம்சங்

தற்போதைய தகவல்களின் படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் இது கிரீன், புளூ மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

 

புதிய சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை 900 டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் ரூ. 67 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் விற்பனையாகும் கேலக்ஸி இசட் ப்ளிப் மாடல் விலை 1379 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்பச் செய்திகள்