விநாயகர்
ஆனை முகக்கடவுள் 9 ஆயுதங்களையும் தரித்து போருக்குப் புறப்பட்டுச் செல்வார். நமக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டு விட்டால், அதை விநாயகரிடம் முறையிட இந்த ஆயுதங்களுடன் வந்து நம்மைக் காப்பாற்றுவார்.
ஐந்து கரமுடைய விநாயகர் அநியாயத்தை அழிப்பதற்கென்றே அவதாரம் எடுத்தவர்.
அசுரர்களை அழிக்க அந்த ஆதி மூலக்கடவுளின் கையில் 29 ஆயுதங்கள் இருந்ததாக குறிப்பிடுகிறார் திருவாவடுதுறை ஆதீன மகா வித்துவான் தண்டபாணி தேசிகர்.
அந்த ஆயுதங்களின் பெயர்கள் இதோ:
1. பாசக்கயிறு, 2. அங்குசம், 3. தந்தம், 4. வேதானம், 5. சக்தி, 6. அம்பு, 7. வில். 8. சக்கரம், 9. கத்தி, 10. கேடயம், 11. சம்மட்டி, 12. கதை, 13. நாக பாசம் (ஒருவகை கயிறு), 14. குந்தாலி, 15. மழு (தீப்பிழம்பு), 16. கொடி, 17. தண்டம், 18. கமண்டலம், 19. பரசு, 20. கரும்பு வில், 21. சங்கம், 22. சூலம், 23. புஷ்பபாணம், 24. கோடரி, 25. அக்ஷ மாலை, 26. சாமரம், 27. கட்டுவாங்கம், 28. தீ அகல், 29. வீணை.
ஆனை முகக்கடவுள் இந்த 29 ஆயுதங்களையும் தரித்து போருக்குப் புறப்பட்டுச் செல்வார். நமக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டு விட்டால், அதை விநாயகரிடம் முறையிட இந்த ஆயுதங்களுடன் வந்து நம்மைக் காப்பாற்றுவார்.