திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை

68 Views
Editor: 0

சமீபத்தில் காலமான நாட்றம்பள்ளி காவல் நிலைய காவலர் தெய்வத்திரு.அண்ணாமலை அவர்களது குடும்பத்தாருக்கு.

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை

சமீபத்தில் காலமான நாட்றம்பள்ளி காவல் நிலைய காவலர் தெய்வத்திரு.அண்ணாமலை அவர்களது குடும்பத்தாருக்கு சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய ரூ 20,83,400/-நிதியுதவி தொகை மற்றும் மரக்கன்றுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்கள் அண்ணாமலை குடும்பத்திற்கு வழங்கி ஆறுதல் கூறினார்.     

திருப்பத்தூர் மாவட்ட நாட்றாம்பள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த  காவலர்  தெய்வத்திரு. அண்ணாமலை என்பவர் கடந்த 29.04.2024 அன்று சாலை விபத்தில் காலமானார் அவர்களது குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில்  அரவருடன் 2017 ஆம் ஆண்டு பணியில்  சேர்ந்த  சககாவலர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி செய்ய வேண்டும் என்ற கருணை
உள்ளத்தோடு, தமிழ்நாடு முழுவதும் உள்ள சக காவலர்கள் ஒன்று திரண்டிய ரூ 20,83,400/- பணத்தை நன்கொடையாக பெற்று, அவற்றை வங்கி நிரந்தர வைப்புத் தொகைகள், ரொக்கம், மற்றும் மரக்கன்றுகள், என இன்று (23.10.2024) திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 2017ம் ஆண்டு காவலர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்கள் அண்ணாமலை அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் கூறினார்

மாநிலச்செய்திகள்