திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பாலாற்று பகுதியில் அதிகளவில் மணல் கொள்ளை ஆனது நடைபெற்று வருகிறது.
குறிப்பாக அம்பலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் தொடர்ந்து மணல் கொள்ளையானது நடைபெற்று வருகிறது.
இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கும் எடுக்காத நிலை உள்ளது குறிப்பாக அம்பலூர் காவல் நிலையத்தின் பணி புரியக்கூடிய காவலர்கள் மணல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடக்கூடிய அவர்களுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய அவல் நிலையம் தொடர்ந்து இருந்து வருகிறது.
அதே நேரத்தில் சங்கராபுரம் வழியாகத்தான் இந்த மண் கொள்ளையானது அதிக அளவில் நடைபெற்று வருகிறது
ஏற்கனவே கொடையாஞ்சி வழியாக மணல் கொள்ளை நடப்பது குறித்து பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்து இருக்கும் நிலையில்.
அவ்வழியாக மணல் கொள்ளை ஆனது தடுத்து நிறுத்தப்பட்டாலும் கூட தற்பொழுது சங்கராபுரம் வழியாக அதிகளவில் மணல் கொள்ளையானது நடைபெற்று வருகிறது