வாணியம்பாடி சி.என்.ஏ சாலையில் உள்ள பஜாஜ் நிதி நிறுவன அலுவலகத்தில் தடையில்லா சான்று வழங்கததால் 

64 Views
Editor: 0

வாணியம்பாடி சி.என்.ஏ சாலையில் உள்ள பஜாஜ் நிதி நிறுவன அலுவலகத்தில் தடையில்லா சான்று வழங்கததால் வாடிக்கையாளர் ஒருவர் அலுவலகத்தை பூட்டு போட்டதை தொடர்ந்து நகர போலீஸார் விசாரணை..

வாணியம்பாடி சி.என்.ஏ சாலையில் உள்ள பஜாஜ் நிதி நிறுவன அலுவலகத்தில் தடையில்லா சான்று வழங்கததால் வாடிக்கையாளர் ஒருவர் அலுவலகத்தை பூட்டு போட்டதை தொடர்ந்து நகர போலீஸார் விசாரணை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துகோயில் பகுதியை சேர்ந்த  ஆட்டோ ஓட்டுனர் வினோத். இவர் பஜாஜ் நிதி நிறுவனத்தில் தவணை முறையில் செல்ஃபோன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

தவணைகள் கட்டி முடிந்த நிலையில் தடையில்லா சான்று கேட்டு கடந்த சில தினங்களாக அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார். நிதி நிறுவன அலுவலக பணியாளர்கள் அவரை தொடர்ந்து தடையில்லா சான்று வழுங்குவதில் காலதாமதம் செய்து வந்ததால் ஆத்திரம் அடைந்த வினோத் பூட்டு வாங்கி வந்து நிதி நிறுவன பணியாளர்கள் அலுவலகத்திற்குள் இருந்த போது அலுவலகத்தை பூட்டு போட்ட பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று தகவலும் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் நகர போலீஸார் விரைந்து சென்று தனியார் நிதி நிறுவன அலுவலகத்தில் போடப்பட்ட பூட்டை திறந்து வைத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தடையில்லா சான்று வங்க தனியார் நிதி நிறுவனம் கால தானதம் செய்ததால் அலுவலகத்தை பூட்டு போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலச்செய்திகள்