நாட்றம்பள்ளி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த பெண் கைது

85 Views
Editor: 0

வாணியம்பாடி,நவ.24- திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தாயப்ப கவுண்டர் தெரு பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சா செடி வளர்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது..

வாணியம்பாடி,நவ.24- திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தாயப்ப கவுண்டர் தெரு பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சா செடி வளர்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு எஸ்.பி.தனிப்படை போலிஸார் விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வசந்தா‌(வயது 62) என்பவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக இரண்டு கஞ்சா செடிகள் விற்பனைக்காக  வளர்த்து வந்தது தெரிய வந்தது. 
இதனை தொடர்ந்து நாட்றம்பள்ளி போலீஸார் வசந்தா மீது வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.

மாநிலச்செய்திகள்