இலங்கை ஏ கிரிக்கெட் அணியானது நான்கு நாட்கள் கொண்ட இரு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.
அங்கு பாகிஸ்தான் ஏ அணியுடன் முதல் தொடராக நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகிறது. போட்டிகள் அனைத்தும் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளது.
அண்மையில் நடைபெற்ற வளர்ந்துவரும் வீரர்களுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவானமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தொடரில் பங்கேற்கும் இலங்கை ஏ அணி எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கையில் இருந்து பாகிஸ்தான் நோக்கி புறப்படுகிறது.