தமிழகத்தில் ஜூலை 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. எவற்றுக்கெல்லாம் அனுமதி?? – தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

92 Views
Editor: 0

தமிழகத்தில் ஜூலை 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக தமிழக அரசு பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 .

தமிழகத்தில் ஜூலை 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக தமிழக அரசு பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Lockdown 6.0 Update : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் தமிழகம் போன்ற மாநிலங்கள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளன‌‌.

இதனால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டது. பொது முடக்கத்தை தமிழக அரசு வரும் ஜூலை 30ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் எவற்றையெல்லாம் அனுமதி அவற்றிற்கெல்லாம் அனுமதியில்லை என்பது பற்றியும் தெரிவித்துள்ளது.

மாவட்டங்களுக்குள் பயணிக்க இ பாஸ் தேவையில்லை. மாவட்டம் விட்டு மாவட்டம் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல நிச்சயம் தேவை என அறிவித்துள்ளது.


 
ஐடி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.

கிராமப்புறங்களில் உள்ள கோவில்கள், மசூதிகள், தர்காக்கள், சர்ச் ஆகியவைகளைத் தெரிந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டீ கடை மளிகை கடை காய்கறி கடை ஹோட்டல்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை செயல்பட அனுமதி.

டீக்கடை, ஹோட்டல் ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து உணவு உண்ண அனுமதி.

கொரானா நிவாரணம் : தொடர்ந்து அதிரடி காட்டும் விஜய் – இப்போ என்ன நடக்குது தெரியுமா?

மாவட்டங்களுக்கு உள்ளேயே தற்போது நடைமுறையில் இருக்கும் தனியார், அரசு போக்குவரத்து வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் 15ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.

டாக்சி, ஷேர் ஆட்டோக்களில் டிரைவர் உட்பட மூவருக்கு அனுமதி.


 
ஆட்டோவில் டிரைவர் உட்பட இருவர் பயணம் செய்ய அனுமதி.

சலூன் கடைகள் தமிழக அரசு குறிப்பிட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி திறந்து கொள்ளலாம். ஆனால் அனைத்து இடங்களிலும் முக கவசம் தனிமனித இடைவெளி என்பது மிக மிக அவசியம் என அறிவுறுத்தியுள்ளது.


 

மாநிலச்செய்திகள்