இ பாஸ் இருக்கா? டுவிட்டரில் போடுங்க, பார்ப்போம்…! உதயநிதிக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

71 Views
Editor: 0

சென்னை: இ பாஸ் வைத்து தூத்துக்குடி சென்றால், அதை டுவிட்டரில் உதயநிதி வெளியிடலாமே? என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்..

சென்னை: இ பாஸ் வைத்து தூத்துக்குடி சென்றால், அதை டுவிட்டரில் உதயநிதி வெளியிடலாமே? என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இரண்டு பேரும் காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, திமுக இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சாத்தான்குளத்தில் உள்ள ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது அவர் இ பாஸ் பெறாமல் தூத்துக்குடி வந்துள்ளார் என்று புகார் எழுந்தது. அவர் பாஸ் பெற்றுள்ளது போல தெரியவில்லை, அப்படி பெறாமல் போய் இருந்தால் அதை அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறி இருந்தார்.

இந் நிலையில் இ பாஸ் வைத்திருந்தால் அதை தமது டுவிட்டரில் உதயநிதி வெளியிடலாமே என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். அவர் மேலும் கூறி இருப்பதாவது:

உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் இன்றி பயணம் செய்துள்ளார். அவர் இ பாஸ் வைத்து தூத்துக்குடி சென்றார், எனில் அதை டுவிட்டரில் வெளியிடலாமே? ஏன் அதை வெளியிடவில்லை.

உதயநிதி இ பாஸ் பெறாமல் ஏமாற்று வேலை செய்து தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று கூறியுள்ளார்.

Tags: அமைச்சர் ஜெயக்குமார், உதயநிதி ஸ்டாலின், சாத்தான்குளம், சாத்தான்குளம் உதயநிதி, தமிழகம்

மாநிலச்செய்திகள்