தள்ளுபடி விலைக்கு கிடைக்கும் தங்கம்.! ஆனால், வாங்கத்தான் ஆளையே காணும்.!

71 Views
Editor: 0

உலக நாடுகளையே மிரட்டி வருகிறது இந்த கொரோனா வைரஸ், இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அதுமட்டுமல்லாமல் பொருளாதாரத்தில் இந்தியாவின் முதுகெலும்பாக இருந்து வந்த பல வணிக தொழில்களும்  முடங்கி கிடக்கின்றன..

உலக நாடுகளையே மிரட்டி வருகிறது இந்த கொரோனா வைரஸ், இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அதுமட்டுமல்லாமல் பொருளாதாரத்தில் இந்தியாவின் முதுகெலும்பாக இருந்து வந்த பல வணிக தொழில்களும்  முடங்கி கிடக்கின்றன.

அதனால் மக்கள் கையில் பணம் இல்லாமல் தவித்து வருகிறார்கள், இந்த நிலையில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் நலிவடைந்துள்ள தங்க விற்பனையை நிலைநாட்ட அதிரடியாக பல தள்ளுபடிகளை வாரி வழங்கி வருகிறார்கள், இப்படி பல நகைக்கடைகள் என்னதான் தள்ளுபடிகளை வாரி வழங்கினாலும் மக்கள் கையில் பணப்புழக்கம் இல்லாததால் பெரிதாக யாரும் வாங்குவதற்கு முன்வரவில்லை.

ஆனால் சிங்கப்பூரில் மட்டும் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளன. தங்கம் விற்பனை மிகக்குறைந்த அளவில் இருந்து வரும் நிலையில் தள்ளுபடிகள் அவின்ஸிற்கு 32 டாலர்கள் வரை வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து அதிகபட்சம் ஆகும் அதுமட்டுமில்லாமல் இந்த விலையோடு உள்நாட்டு விலையில் இறக்குமதி வரி மற்றும் விற்பனை வரி என அனைத்தும் அடங்கும்.

சில மாநிலங்களில் நகை கடைகளை திறந்து வைத்திருந்தாலும் விற்பனைகள் எதுவும் இல்லாமல் வெறிச்சோடி தான் இருக்கின்றது. அதனால் மீண்டும் மூடப்பட இருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன.

மாநிலச்செய்திகள்