2019-20 நிதியாண்டுக்கான வருமானவரியை செலுத்த நவம்பர் வரை காலக்கெடு நீட்டிப்பு..! மத்திய அரசு அறிவிப்பு..!

61 Views
Editor: 0

வருமான வரித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருமான வரியை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளது. வருமான வரித் துறையின் அறிக்கையின்படி, அனைத்து வருமான வரி கணக்குகளையும் நவம்பர் 30, 2020’க்குள் தாக்கல் செய்தால் போதும்.
 .

வருமான வரித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருமான வரியை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளது. வருமான வரித் துறையின் அறிக்கையின்படி, அனைத்து வருமான வரி கணக்குகளையும் நவம்பர் 30, 2020’க்குள் தாக்கல் செய்தால் போதும்.

 

இது தொடர்பாக வருமான வரித் துறை வெளியிட்டுள்ள ட்வீட்டில் , “நாங்கள்இந்த கடினமான நேரங்களை புரிந்துகொண்டு காலக்கெடுவை இன்னும் நீட்டித்துள்ளோம். இப்போது, 2019-20 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல் 2020 நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வசதிக்கேற்ப திட்டமிட இது உதவும் என்று நம்புகிறோம்.” என குறிப்பிட்டுள்ளது.

2019-20 நிதியாண்டிற்கான வரி சேமிப்பு முதலீடுகள் / கொடுப்பனவுகளுக்கான காலக்கெடுவை ஐடி துறை ஜூலை 31 வரை நீட்டித்த சில நாட்களுக்கு பின்னர் வருமான வரித் துறையின் அறிவிப்பு வந்துள்ளது.

முன்னதாக பயோமெட்ரிக் ஆதாரை பான் உடன் இணைப்பதற்கான காலக்கெடுவை 2021 மார்ச் 31 வரை நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக, 2019-20 நிதியாண்டிற்கான டி.டி.எஸ் / டி.சி.எஸ் அறிக்கைகளை வழங்குவதற்கான காலக்கெடுவையும்2020 ஜூலை 31 வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.

அதே போல் நிதியாண்டு 19-20க்கான டி.டி.எஸ் / டி.சி.எஸ் சான்றிதழ்களை வழங்குவது ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags: 2019-20 நிதியாண்டு, காலக்கெடு நீட்டிப்பு, மத்திய அரசு, வருமானவரி
 

 

மாநிலச்செய்திகள்