திருவண்னாமலை மாவட்டம் மேல் கரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மகன் தீபக், நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். வனப்பகுதியில் கிடைத்த நாட்டு வெடிகுண்டை எடுத்து வந்து சிறுவன் தனது வாயில் வைத்து கடித்துள்ளான்.
திடீரென வெடித்ததால், சிறுவனின் வாய் மற்றும் தாடை உள்ளிட்ட பகுதிகள் சிதைந்து சேதமடைந்தது. இதனை கண்ட நண்பர்கள் கூச்சலிட்டு கதற, அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நாட்டு வெடிகுண்டு வெடித்து சிறுவன் முகம் சிதைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வனப்பகுதியில் சுற்றித்திரியும் மான் மற்றும் காட்டு பன்றிகளை வேட்டையாட சமூக விரோதிகள் சிலர் இதுபோன்று நாட்டுவெடிகுண்டுகளை வைப்பதாக குற்றஞ்சாட்டிய அப்பகுதி மக்கள், கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.