நாளை முதல் மாறும் விதிகள் வியாபாரிகளுடன் ஆலோசனை

78 Views
Editor: 0

கண்ணகி நகர்:நாளை முதல், சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீடிப்பதால், கடைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, வியாபாரிகளுடன் போலீசார் கலந்தாலோசித்தனர்..

பதிவு செய்த நாள்
04ஜூலை
2020
23:05

கண்ணகி நகர்:நாளை முதல், சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீடிப்பதால், கடைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, வியாபாரிகளுடன் போலீசார் கலந்தாலோசித்தனர்.

சென்னையில், முழு ஊரடங்கு, இன்றுடன் நிறைவடைகிறது. நாளை முதல், 31ம் தேதி வரை, சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.காய்கறி, மளிகை, டீக்கடை, ஓட்டல் ஆகியவை, காலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரையும், இதர கடைகள், காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரையும் செயல்பட, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.இந்த நேரத்தில், வியாபாரிகள் கட்டுப்பாடுகளை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்ற ஆலோசனை கூட்டம், கண்ணகி நகர் காவல் நிலையத்தில் நடந்தது.இதில், கண்ணகி நகர், ஓ.எம்.ஆர்., பகுதியில் உள்ள வியாபாரிகள் பங்கேற்றனர்.

கடை உரிமையாளர்கள், ஊழியர்கள், முக கவசம், கையுறை அணிய வேண்டும். கடையில், கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும்.முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு, பொருட்கள் வழங்கக் கூடாது; கூட்டம் கூடுவதை தவிர்க்க, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேவைப்படும் இடங்களில், தடுப்பு அமைத்து, வரிசையில் நிற்க வைக்க வேண்டும்; காத்திருக்க நேரிட்டால், முதியவர்கள் அமர இருக்கை வழங்க வேண்டும்.கடையில் இல்லாத பொருட்களை, பெயர் பலகையில் எழுதி வெளியில் தொங்கவிட வேண்டும் என, போலீசார் வலியுறுத்தினர்.மேலும், அனுமதி வழங்கப்பட்ட நேரத்தில், கடையை திறந்து, மூட வேண்டும் என, போலீசார் கூறினர்.
 
மாநிலச்செய்திகள்