டெல்லி:
நாடு முழுவதும் இலவச காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதம் நீட்டிக்கப்படுகிறது.
மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதம் நீட்டிக்க, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமரின் அன்னயோஜனா திட்டத்தின் கீழ், 5 கிலோ அரிசி, கோதுமை மற்றும் பருப்பு என 81 கோடி பேருக்கு நவம்பர் வரை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் குடியேறிய ஏழைகளுக்கு வாடகை வீடுகள் கட்டப்பட உள்ளன.
நாடு முழுவதும் இலவச காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதம் வழங்கப்படும். வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஊழியர்கள், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய 24 சதவீதம் பங்களிப்பு தொகையை மத்திய அரசே செலுத்தும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.
Tags: உஜ்வாலா திட்டம், காஸ் சிலிண்டர், டிரெண்டிங், மத்திய அமைச்சரவை கூட்டம், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்