சென்னை : சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தில் 2657 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 72,500 ஆகும். அதில், 49,587 பேர் குணமடைந்தனர். இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, கோடம்பாக்கம் மண்டலத்தில் 2657 பேர், அண்ணா நகர் 2511 பேர், தேனாம்பேட்டை 2118 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags: கொரோனா வைரஸ், சென்னை