கொரோனா தொற்றுக்கு சித்தா மருந்து கண்டறிந்தால் சித்த மருத்துவர்களை சந்தேகிப்பது ஏன்? -ஐகோர்ட் கேள்வி

66 Views
Editor: 0

சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் வழக்கில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தை எதிர் மனுதாரராக சேர்த்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ந்து கூறி வந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு புகார்கள் வந்த நிலையில், அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை எதிர்த்து திருத்தணிகாசலத்தின் தந்தை சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்த மருத்துவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும், சித்த மருந்துகளை கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்தும் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

சித்த மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிக்கின்றன. கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்ததாக கூறினால், அதனை சந்தேகிப்பது ஏன்? தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? 

நமது மருத்தவர்களுக்கு கட்டமைப்பு மற்றும் பண உதவி செய்து அவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்க வேண்டும். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக இதுவரை எத்தனை சித்த மருத்துவர்கள் கூறி உள்ளனர்?எத்தனை மருந்துகள் ஆயுஷ் அமைச்சகத்தற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன? 

எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன? அவற்றில் போதுமான நிபுணர்கள் உள்ளார்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தை எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவு பிறப்பித்தனர்.

மாநிலச்செய்திகள்