அமைச்சர் எதுக்காக வருகிறார்?

73 Views
Editor: 0

சென்னை, திருவொற்றியூர் மண்டலத்தில், 'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, மண்டல கட்டுப்பாட்டு மையம் துவங்கப்பட்டது.

                      அமைச்சர் எதுக்காக வருகிறார்...

சென்னை:

சென்னை, திருவொற்றியூர் மண்டலத்தில், 'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, மண்டல கட்டுப்பாட்டு மையம் துவங்கப்பட்டது. இதை, வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் திறந்து வைத்தார்.பின், ஐ.ஏ.ஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மட்டுமின்றி, அ.தி.மு.க., நிர்வாகிகள் என, 30 பேர் புடைசூழ, அமைச்சர் உதயகுமார், நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார்.இதைப் பார்த்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர், 'கொரோனாவை தடுக்க, மிக முக்கிய அஸ்திரமே, சமூக இடைவெளி தான் என, அரசு அறிவுறுத்தி வருகிறது. இங்கே அமைச்சர், 30 பேருடன் நெருக்கமாக அமர்ந்தபடி பேட்டி கொடுக்கிறார்... இவர், தொற்றை தடுக்க வருகிறாரா, பரப்ப வழி வகுக்கிறாரா...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரிக்க முயன்றாலும், பீதியடைந்தனர்.
 

 

மாநிலச்செய்திகள்