நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோருவதாகத் திட்டம்:

51 Views
Editor: 0

கொரோனா பாதிப்பு காரணமாக நடப்பாண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோருவது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோருவதாகத் திட்டம்: இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்..

கொரோனா பாதிப்பு காரணமாக நடப்பாண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோருவது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.

இதில், நடப்பாண்டின் கல்லூரி இறுதித் தேர்வு தொடர்பாகவும், மாநிலத்திற்குள் பொது போக்குவரத்தை அனுமதிப்பது தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.

 


 

 

மாநிலச்செய்திகள்