"சென்னை ரிட்டர்ன்ஸ்".. மூட்டை முடிச்சுகளுடன் ஃபிளைட்டில் கிளம்பி வரும் மக்கள்.. என்ன காரணம்!!

46 Views
Editor: 0

சென்னை: பஸ்கள் ஓடாவிட்டாலும், பிற மாவட்டங்களில் இருந்து, ஃபிளைட்டுகளை பிடித்து கொண்டாவது சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம்...

இதனால், மாநிலத்துக்கு உள்ளே இயக்கப்படும் பேருந்து சேவை பற்றி முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.. அதன்படி, அரசு பஸ், தனியார் பொதுபோக்குவரத்து சேவை ஜூலை 15 வரை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த சேவை நிறுத்தம், இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஆனால், சென்னையில் ஏற்கனவே தொற்று அதிகரிக்க ஆரம்பித்துவிட்டதால், 2, 3 மாதங்களாக பலர் ஊரை காலி செய்து கொண்டு சொந்த ஊர் செல்ல தொடங்கினர்.. போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தாலும், டூவீலரிலேயே ஊர் வந்து சேர ஆரம்பித்தனர். இந்த சமயத்தில்தான் மற்ற மாவட்டங்களிலும் தொற்று பரவ ஆரம்பித்துவிட்டது... தொற்றே இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட நீலகிரி போன்ற இடங்களிலும் ஒரே நாளில், 30, 40 பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலை உள்ளது.. இதனால் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இப்போது, திரும்பவும் சென்னைக்கே திரும்ப ஆரம்பித்து விட்டனர்

 chennai: other district people return to chennai via flights
பஸ் வசதி இல்லை என்றாலும், அதற்கான தடை நீட்டிப்பு என்றாலும், விமானங்கள் வழியாக சென்னை திரும்பும் மக்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 10 நாளைக்கு முன்பு வரை 1,500-ஆக இருந்த சென்னைக்கு வருவோர் எண்ணிக்கை 2 நாட்களுக்கு முன்பு 2,500-ஐ தொட்டுவிட்டது.. இதனால் திரும்பவும் சென்னைக்கு பிரச்சனை வரவும் வாய்ப்புள்ளது

இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சென்னை தொற்றில் இருந்து மெல்ல வெளியே வந்து கொண்டிருக்கிறது.. கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது.. அதனாலேயே சென்னைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் கருதப்படுகிறது.. எப்படியோ விரைவில் சென்னை மீண்டு வந்தால் சரி!

 

மாநிலச்செய்திகள்