ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் பரபரப்பான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதனால் முக்கியச் செய்திகளுக்கு பஞ்சமில்லை. இன்றைய நாளின் பல்வேறு செய்திகளை இங்கே சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் “சமயம் தமிழ்” உடன்...
தமிழகத்தின் முக்கியச் செய்திகள்:
* தமிழகத்தில் இன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கப்படும் - தமிழக அரசு
* புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 825 ஆக அதிகரித்துள்ளது.
* விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர். நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் ஓடையில் கவிழ்ந்தது.
* சென்னை மீனம்பாக்கம், கிண்டி, பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. ராமாபுரம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், போரூர், பம்மல், அனகாபுத்தூர், குன்றத்தூர், பூந்தமல்லி, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி,மின்னலுடன் கனமழை பெய்துள்ளது.
* கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக கறுப்பர் கூட்டம் சேனலை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.