ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

50 Views
Editor: 0

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி இந்த மாத பூஜைக்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை..

                      சபரிமலை ஐயப்பன் கோவில்

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தந்தரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து, தீபாராதனை காட்டினார். இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், கணபதி ஹோமம் நடைபெற்றது. இதையடுத்து காலை 7.30 மணிக்கு உஷ பூஜை, 9 மணிக்கு கலசாபிஷேகம், 9.30 மணிக்கு உச்ச பூஜைக்கு பின் நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு அத்தாள பூஜை, அதன் பிறகு நடை அடைக்கப்படும்.

20-ந் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். அன்று இரவு 7.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுவதுடன் ஆடி மாத பூஜைகள் நிறைவு பெறும்.

 

கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி இந்த மாத பூஜைக்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 20-ந் தேதி பம்பை ஆற்றில் ஆடி அமாவாசை பலி தர்ப்பணம் நடைபெறும்.

மாநிலச்செய்திகள்