திருச்சி: இடப் பிரச்னை; கம்பியால் தாக்கப்பட்ட பெண்! - வார்டு உறுப்பினருக்கு நேர்ந்த சோகம்

47 Views
Editor: 0

கடந்த 13-ம் தேதி, மாலை ஆலிஸ் நிர்மலாராணி சர்ச்சைக்குரிய இடத்தில் வைத்திருந்த விறகுகளை எதிர்த் தரப்பினர் தீயிட்டு எரித்ததாகக் கூறப்படுகிறது. இதில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது..

பெண்னை தாக்கும் இளைஞர்கள்

 

கடந்த 13-ம் தேதி, மாலை ஆலிஸ் நிர்மலாராணி சர்ச்சைக்குரிய இடத்தில் வைத்திருந்த விறகுகளை எதிர்த் தரப்பினர் தீயிட்டு எரித்ததாகக் கூறப்படுகிறது. இதில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

திருச்சியில் இடப் பிரச்னை காரணமாக கணவன், மனைவியை இரும்புக் கம்பி மற்றும் கட்டையால் சரமாரியாகத் தாக்கும் வீடியோ காட்சி காண்போரைப் பதற வைத்துள்ளது.

இடப்பிரச்னைஇடப்பிரச்னை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொத்த மேட்டுப்பட்டி நேருஜி நகரைச் சேர்ந்தவர் ஆலிஸ் நிர்மலா ராணி. இவரின் கணவர் ஆரோக்கியதாஸ். கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் 12-வது வார்டு உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஆலிஸ் நிர்மலா ராணி குடும்பத்தினருக்கு அவரது வீட்டின் அருகே பூர்வீக காலிமனை உள்ளது. இதில் அவரது உறவினரான சேசு என்பவர் அந்த சொத்தில் உரிமையுள்ளதாக அடிக்கடி பிரச்னை செய்துவந்துள்ளார்.

அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், இருதரப்பிலும் அவ்வப்போது ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்னைகள் வருவது வழக்கமாக இருந்துள்ளன. மணப்பாறை காவல்நிலையத்தில் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நீதிமன்றத்தில் தீர்வு செய்துகொள்ள வேண்டும், சண்டைகளில் ஈடுபடக் கூடாது. அப்படி ஈடுபட்டால் இரு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்வோம் என்று காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

 

இந்நிலையில் கடந்த 13-ம் தேதி, மாலை ஆலிஸ் நிர்மலாராணி சர்ச்சைக்குரிய இடத்தில் வைத்திருந்த விறகுகளை எதிர்த் தரப்பினர் தீயிட்டு எரித்ததாகக் கூறப்படுகிறது. இதில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறில், எதிர்த் தரப்பினர் இரும்புக் கம்பி, அரிவாள் மற்றும் கற்களைக் கொண்டு ஆரோக்கியதாஸை கண்மூடித்தனமாகத் தாக்கியதாகவும், அதில் ஆரோக்கியதாஸ் ரத்தவெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே நினைவின்றி சரிந்தார் என்றும் கூறப்படுகிறது.

கணவர் தன் கண்முன்னே தாக்கப்படுவதைக் கண்டு அலறிய ஆலிஸ் நிர்மலா ராணியையும் அவர்கள் இரும்பு கம்பி மற்றும் பிவிசி பைப்களைக் கொண்டு தாக்கி நிலைகுலைய வைத்தனர் எனக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் காட்சிகள் அருகிலிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. அவை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மயங்கிக் கிடந்த தம்பதியரை அருகிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, அங்கு அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து மணப்பாறை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வழக்கை விசாரித்து வரும் காவலர்களிடம் பேசினோம். ஆரோக்கியதாஸ், ஆலிஸ் நிர்மலா ராணி குடும்பத்தினர் அந்த இடத்துக்கான பட்டாவை வைத்திருக்கிறார்கள். எதிர்த்தரப்பில் சேசு என்பவர் பத்திரம் வைத்திருக்கிறார். இவர்கள் இருவருமே உறவினர்கள் தான். இந்நிலையில் இருவருக்கும் இடப்பிரச்னை நீண்டகாலமாக நீடித்துவருகிறது. இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

போலீஸார் விசாரணைபோலீஸார் விசாரணை

இருவரும் உடன்படவில்லை. நீதிமன்றத்தை நாடுங்கள் என்றும் பொது வெளியில் இரு தரப்பினரும் அடித்துக்கொள்ளக்கூடாது என்றும் அப்படி அடித்துக்கொண்டால் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்வோம் என்றும் எச்சரித்து அனுப்பினோம். இந்நிலையில் மீண்டும் இரு தரப்பில் அடிதடி சம்பங்கள் நடந்திருக்கிறது. இரு தரப்பிலும் புகார் கொடுத்திருக்கிறார்கள். அதன் பேரில் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறோம்" என்று முடித்துக்கொண்டனர்.

 

மாநிலச்செய்திகள்