'நான்தான் செய்தேன்' பெரியார் சிலை விவகாரத்தில் வாலிபர் சரண்..!

43 Views
Editor: 0

கோவை சுந்தராபுரம் பெரியார் சிலையை அவமதித்த விவகாரத்தில் அருண் என்பவர் தாமாக சரணடைந்துள்ளார்..

 

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் காவிப்பொடி வீசிச்சென்றதாக தகவல் அறிந்த பெரியாரிய ஆதரவாளர்கள் அப்பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கோவையின் பல்வேறு இடங்களில் திராவிட கழகத்தினர் பெரியார் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு இந்த சம்பவத்தில் ஈடுபட்டவரை கைது செய்ய வலியுறுத்தி வந்தனர்.

samayam tamil

தொடர்ந்து பெரியார் சிலைகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த் நிலையில் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது காவிப் பொடி வீசிய பாரத் சேனா அமைப்பை சேர்ந்த அருண் கிருஷ்ணன் (21) என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் இன்று சரனடைந்துள்ளார்.

பெரியார் முழு உருவச் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றிய சம்பவத்துக்கு ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட திராவிட கட்சி தலைவர்கள் மற்றும் பெரியார் கருத்தை பின்பற்றுபவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக இளைஞர் ஒருவர் சரணடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலச்செய்திகள்